கனடாவில் குடியிருப்பிலிருந்து மாயமான 7 வயது சிறுமி மற்றும் அவரின் தந்தையை கண்டுபிடிப்பதற்கு காவல்துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
கனடாவில் இருக்கும் வான்கூவர் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று காவல்துறையினருக்கு கிடைத்த தகவலில் வடக்கு கோவிச்சன் மற்றும் டங்கன் பகுதியை சேர்ந்த ஜெஸ்ஸி பென்னட் மற்றும் அவரின் ஏழு வயது மகள் வயலட் பென்னட் இருவரையும் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவுபடி, 20-ஆம் தேதியன்று ஜெஸ்ஸி, தன் மகளை தாயிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். எனினும், தற்போது வரை ஜெஸ்ஸியும் குழந்தையும் எங்கிருக்கிறார்கள்? என்பது தெரியவில்லை. எனவே காவல்துறையினர் இது தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று மக்களிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.