நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து நேற்று தனிப்படை போலீசார் சதீஷை தேடிவந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மாணவி கொலை சம்பவத்தின் தொடர்ச்சியாக, சத்யாவின் தந்தை மாணிக்கம் என்பவர் நேற்று இரவு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றார். முதலில் சைதாப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கின்றார்கள்.
பிறகு அங்கிருந்து ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு இருக்கின்றார்கள். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மகள் இறந்த சோகம் தாங்காமல், தந்தையும் மாரடைப்பில் உயிரிழந்துள்ளது, பேசும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.