தாய் கண் முன்னரே ஹரியானாவில் சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அரியானா மாநிலத்தில் இருக்கும் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தையல் பயிற்சி முடித்து விட்டு தனது தாயுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வழியாக வந்த காரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுமியை தாயின் கண் முன்னரே கடத்தியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் தனது மகளை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் கார் வேகமாக சென்றதால் அவரால் அவரது மகளை காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுமியை கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.