Categories
தேசிய செய்திகள்

சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்… காருக்குள்ளேயே கட்டாய தாலி கட்டிய இளைஞர்..!!

 பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்திச் சென்று காருக்குள்ளேயே தாலி கட்டிய இளைஞரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த அரசிக்கெரே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், அப்பகுதியிலுள்ள பால்பண்ணை பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக காரில் வந்த இளைஞர்கள், அப்பெண்ணைத் தூக்கி காருக்குள் அடைத்து கடத்திச் சென்றனர். சினிமா பட பாணியில், நொடிப்பொழுதில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் செய்தவறியாது திகைத்துநின்றனர்.

இது குறித்து கேள்விப்பட்ட பெண்ணின் பெற்றோர், நடந்த சம்பவம் குறித்து டுட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், ”எனது உறவுக்காரரான மானு என்பவர் எனது மகளைத் திருமணம் செய்துகொள்ள பெண் கேட்டார்.கர்நாடகா, இளம்பெண்ணை காரில் கடத்தி, கட்டாய தாலி கட்டிய இளைஞர்ஆனால் நாங்கள் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், அவர் எங்கள் மகளைக் கடத்திச் சென்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் கடத்தப்பட்ட பெண்ணின் கழுத்தில், இளைஞர் வலுக்கட்டாயமாக தாலி கட்டும் காட்சிகள் அடங்கிய காணொலிக் காட்சிகள் வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |