மேற்கு வங்கத்தில் பெண்கள் இருவர் திருமணம் செய்ய தீர்மானித்து நிச்சயதார்த்தம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்குவங்கத்தில் வசிக்கும் பரோமிதா முகர்ஜி மற்றும் சுரபிமித்ரா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நெருக்கமான தோழிகள். இவர்கள் இருவரும் ஒன்றாகவே படித்து, தற்போது நாக்பூரில் மருத்துவர்களாக இருக்கிறார்கள். இருவரும், சிறு வயது முதலே ஒன்றாகவே வளர்ந்ததால், ஒருவர் மீது ஒருவருக்கு அதிக அன்பு இருக்கிறது.
இதனால் இருவரும் காதலித்திருக்கிறார்கள். சில வருடங்களாக இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், இருவரும் திருமணம் செய்ய தீர்மானித்து, கடந்த 29-ஆம் தேதியன்று நிச்சயதார்த்தம் செய்திருக்கிறார்கள். இது பற்றி இவர்கள் தெரிவித்திருப்பதாவது, “நாங்கள் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று வெளிப்படையாக கூறிக்கொள்கிறோம்.
இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. நாங்கள் வாழ்நாள் முழுக்க சேர்ந்தே இருப்போம். இந்த வருடம் நாங்கள் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். அதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது” என்று கூறியிருக்கிறார்கள்.