Categories
உலக செய்திகள்

வேனில் இருந்த சிறுமியை மறந்த ஓட்டுனர்.. வீட்டிற்கு சென்றதால் நேர்ந்த மரணம்.. மலேசியாவில் பரிதாப சம்பவம்..!!

மலேசியாவில், வேன் ஓட்டுனர் ஒருவர், 8 வயதுடைய சிறுமி, தன் வேனுக்குள் இருந்ததை, மறந்து வீட்டிற்கு சென்ற, அடுத்த சில மணி நேரங்களில் சிறுமி பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் ஆட்டிசம் பாதித்த 8 வயதுடைய சிறுமி, ஒரு வேனில் பயணித்திருக்கிறார். அந்த வேன் ஓட்டுநர், சிறுமியை காப்பகத்தில் விடுவதற்கு மறந்துவிட்டார். அப்படியே, சிறுமியுடன் வேனை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால், மதியம் சுமார் 2.30 மணி முதல் 5.30 மணி வரை, வேனில் இருந்த சிறுமி சுயநினைவை இழந்துவிட்டார். அதன்பின்பு, அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்கள், சிறுமியை பரிசோதித்துவிட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சிறுமி மரணத்திற்கு சரியான காரணம் தெரியவில்லை. உடற்கூறாவிற்கு பின்பு தான் தெரியும் என்று காவல்துறையினர் கூறியுள்ளார்கள். இந்நிலையில், கவனக்குறைவாக இருந்த வேன் ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |