உக்ரைனில் தாய் பெட்ரோலுக்கு பணம் செலுத்த சென்ற சமயத்தில் மகளை காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்ரைன் போரிஸ்பீல் என்னும் இடத்தில் வைத்து எலிசவேத் என்ற பெண் தனது காருக்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணத்தை கொடுக்க மேலாளரின் அறையை நோக்கி சென்றுள்ளார். அச்சமயத்தில் அவரது மகள் காரின் அருகே நின்று கொண்டிருந்தார். இந்நிலையில் அங்கு வந்த ஒருவர் பொம்மைகளை பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை மெதுவாக தனது காரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து வேகமாக போய் விட்டார். எலிசவேத்தின் தந்தை காரில் அமர்ந்திருக்க மகளைக் காணாமல் பதறிப்போய் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் குழந்தையை ஒருவர் கடத்தும் காட்சி பதிவாகி இருந்தது .அவர் கடத்திச் சென்ற காரை சிசிடிவி காட்சிகள் மூலம் அறிந்து கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் இரண்டு மணி நேரத்தில் குழந்தையை கடத்திய நபரையும் குழந்தையையும் விமான நிலையம் அருகே வைத்து காவல் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரிக்கையில் சிறுமியை கடத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடத்தல் காரணை விரைவில் பிடிப்பதற்கு உதவிய காவல் அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவர் நன்றி தெரிவித்ததோடு மிகப்பெரிய பாலியல் குற்றம் நடப்பதை தடுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.