புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிறுமி தான் ஆசையாக வளர்த்த முடியை நன்கொடையாக கொடுத்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த சிறுமியான தேவனா என்பவர் சிறுவயது முதலே தனது தலைமுடியை மிகவும் நீளமாக வளர்த்து வந்தார். இந்நிலையில் புற்றுநோயால் அவதிப்பட்டு பெண்கள் தங்களின் தலைமுடியை இழந்து வேதனை படுவதை பார்த்த தேவனா தான் ஆசையாக வளர்த்து வந்த முடியை அவர்களுக்காக நன்கொடை வழங்க முடிவு செய்தார். இதனால் தனது 30 அங்குல நீள முடியை புற்றுநோய் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
இதன்மூலம் மற்ற பெண்களும் தங்களின் தலைமுடியை நன்கொடையாக வழங்குவதற்கு முதல் அடியை தேவனா எடுத்து வைத்துள்ளார். இது குறித்து பேசிய சிறுமி கூறுகையில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்க எனது தலைமுடியை கொடுத்தேன்” எனக் கூறினார். அவரது தாயார் கூறுகையில், தேவனா தனது தலைமுடியை நன்கொடை அளிக்க முன்வந்தது ஆச்சரியத்தை கொடுத்ததாகவும், வேண்டாம் என்று கூறியும் பிடிவாதமாக இதனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.