இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியருக்கு 2 ஆவது குழந்தை பிறந்த செய்தியை அறிந்த பிரித்தானிய பிரதமரான போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து இளவரசரான ஹரி மற்றும் மேகன் இருவரும் காதலித்து அரச குடும்பத்தின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து இவர்கள் இருவரும் அரச குடும்பத்தினுடைய மூத்த உறுப்பினர்கள் என்னும் பொறுப்பு தங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தற்போது அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த தம்பதியருக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்தப் பெண் குழந்தைக்கு, இளவரசர் ஹரியின் தாய் மற்றும் இங்கிலாந்தின் 2 ஆம் ராணி எலிசபெத் ஆகியோரது நினைவாக லில்லிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் வின்ட்சர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் பக்கிங்காம் அரண்மனை இந்த தம்பதியருக்கு 2 ஆவது குழந்தை பிறந்த செய்தியைக் கேட்டு அரச குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளதாக தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தம்பதியருக்கு இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ட்விட்டரில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.