Categories
உலக செய்திகள்

மஞ்சள் நிறமாக மாறிய இளம்பெண் உடல்…. அதிர்ந்து போன குடும்பத்தினர்…. பின்னர் நடந்த சோகம் ..!!

பிரிட்டனை சேர்ந்த செவிலியர் ஒருவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனி. வீட்டிற்கு தினமும் சென்று வந்தால் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற காரணத்தினால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார் டேனி. இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில் வீட்டில் இருந்த அவரது உடல் திடீரென மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இதனை பார்த்த தங்கை அதன் விபரீதம் புரியாமல் விளையாட்டாக “அக்கா உங்கள் உடலின் நிறம் வேடிக்கையாக உள்ளது” என கிண்டல் செய்துள்ளார். இதனை பார்த்த டேனியின் தாய் ஷெரான் மகளை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். சிகிச்சைக்காக சென்ற டேனியின் உடல்நிலை மிகவும் மோசமாகி கோமாவிற்கு செல்லும் நிலை உருவானது.

அவருக்கு ரத்தம் ஏற்றியும் அவரது உடல்நிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை எதுவும் பலனளிக்காத நிலையில் நிமோனியா தாக்கி அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்க தொடங்கின. இறுதியில் கோமாவில் இருந்தபடியே அவரது உயிர் பிரிந்தது. ஆனால் இதுவரை எதனால் டேனியின் உடல் மஞ்சள் நிறத்திற்கு மாறியது? எந்த நோயால் பாதிக்கப்பட்டார்? என்பது குறித்து தெரிய வரவில்லை.

Categories

Tech |