Categories
உலக செய்திகள்

சாலையில் பிச்சை எடுத்த இளம்பெண்.. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபோது ஏற்பட்ட நிலை..!!

தாய்லாந்தில் பிச்சை எடுக்கும் இளம்பெண், தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாட்டையாவில் இருக்கும் பரபரப்பு நிறைந்த ஒரு சாலையில் கடைக்கு முன் இளம்பெண் ஒருவர் சில நாட்களாகவே கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பெண் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதாவது அப்பகுதியில் ஒரு கும்பல் பச்சிளம் குழந்தைகளை கடத்தி பெண்களிடம் கொடுத்து பிச்சை எடுக்க செய்வதும் நடக்கிறது.

எனவே அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்ற போது அந்த பெண் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார். காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, அது தன் குழந்தை என்றும் கணவருக்கு வேலை இல்லாததால் சாப்பிட வழியின்றி பிச்சை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும் குழந்தை அவருடையது தான் என்பதற்கான ஆதாரம் எதுவும் அவரிடம் இல்லை. எனவே காவல்துறையினர் விசாரணைக்காக அந்த பெண்ணை அழைத்துச்சென்றனர். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் மற்றும் குடியேற்ற நிலையை ஆராயவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |