இஞ்சி என்றதும் நம் உடலில் ஓர் அதிர்வு ஏற்படும். ஏனென்றால் அது அவ்வளவு காரமாக இருக்கும். இஞ்சி மருந்து என்றதும் நாம் பயத்தில் ஓடி ஒளிந்த காலத்தை மறக்க முடியாது. அந்த நினைவுகள் எல்லாம் நம் மனதுக்குள் இன்று வரை இருந்து கொண்டே இருந்தாலும் இஞ்சியில் உள்ள மருத்துவ பயனை நாம் வெறுமனே கடந்து விட முடியாது. வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
கொழுப்புச்சத்தை குறைப்பதற்கு இஞ்சி பயன்படுகிறது.
இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
ஒவ்வொரு நாளும் உணவில் இஞ்சி சேர்த்துக் கொள்வதால் இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.
இஞ்சியானது இதய ரத்தக்குழாய்கள் எதிலும் அடைப்பு உண்டாகாமல் தடுக்கும்.
இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொந்தி கரைந்து விடும்.
இஞ்சி சாற்றை தொப்புளைச் சுற்றி பற்றுப்போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம் நீங்கும்.