இஞ்சி கசாயம் செய்வது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காகவும், காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் பல மருத்துவ குறிப்புகளை நாம் கேட்டு அறிந்திருப்போம். அந்த வரிசையில் தற்போது இஞ்சி கசாயம் செய்வது எப்படி என்பது குறித்து காண்போம். இஞ்சி கசாயம் காய்ச்சல் இருப்பவர்கள் அருந்தினால் நல்ல பலனைத் உடனடியாக தரும்.
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து அதனுடைய தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் அதனுடன் சிறிது உலர் திராட்சை, ஏலக்காய், மிளகு உள்ளிட்டவற்றை சேர்த்து நன்கு பொடிபட அரைக்க வேண்டும். பிறகு அதனுடன் தண்ணீர் சேர்த்து சுண்டக்காய்ச்சி வடிகட்டி தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து பருகினால் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாக நல்ல பலனைத் தரும்.