இஞ்சி தேனூரல் செய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
இஞ்சி அரை கிலோ வாங்கி அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதன் மேல் வாயை ஒரு துணியால் மூடி வைத்து, துணியின் மேல் இஞ்சித் துண்டுகளை போட்டு அடுப்பை ஏற்றி தண்ணீரை கொதிக்க விடவும். அப்போது நீரின் கொதிநிலை ஆவி இஞ்சி துண்டுகளில் இருக்கக்கூடிய ஈரப்பதத்தை முற்றிலுமாக குறைந்து விடும்.
ஈரப்பதம் நிறைந்த இஞ்சியை எடுத்து அரை கிலோ தேனில் போட்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஊற வைக்க வேண்டும். தினமும் காலையில் ஒரு துண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பல வியாதிகள் நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். முதியோர்கள் இந்த இஞ்சி தேனூரலை சாப்பிடும் போது அவர்களுக்கு இளமைக்கான சக்தி கிடைக்கும்.