நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சில வழிமுறைகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
பூண்டு, இஞ்சிக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் இருப்பதால், தினமும் இவற்றை உணவில் சேர்க்கலாம். பூண்டில் தேன் கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வரலாம். இஞ்சியை டீ யில் போட்டு குடிக்கலாம். இஞ்சியில் ஆன்டிவைரஸ் தன்மை அதிகம் இருப்பதன் காரணமாக, வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடி நோய் வராமல் பாதுகாக்கிறது.