கொரோனா சோதனையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
முதல் முறையாக திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெறுகின்றது. ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அந்தந்த ஊரில் இருந்து பங்கேற்கிறார்கள். இதில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை திமுக ஆரம்பித்து உதவி செய்து வருவது குறித்து பேசப்பட்டது. இதன் மூலமாக 122 சட்டமன்ற தொகுதிகளில் 20 லட்சம் பேர் பலன் அடைந்திருப்பதாக ஸ்டாலின் தொடக்க உரையில் பேசினார். அதுமட்டுமல்லாமல் கொரோனா சோதனையை தமிழக அரசு சரியாக செய்யவில்லை.
ஊரடங்கு தளர்த்தி கோயம்படு மூலம் கொரோனா பரவுவதை அரசு கட்டுப்படுத்த தவறி விட்டது. இதில் ஊழல் நடந்து விட்டதாக தொடக்க உரையில் சொல்லியுள்ளார். ஒன்றிணைவோம் திட்டத்தின் மூலமாக திமுகவுக்கு பெயர் கிடைத்துள்ளதாகவும், என்னை வீட்டிலேயே வைத்துக் கொண்டு நீங்களே களத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று தொடக்க உரையில் முக.ஸ்டாலின் பேசினார். ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களின் கருத்தை முக.ஸ்டாலின் கேட்டு வருகின்றார்.