காதலனின் மனைவிக்கு ஒன்றரை கோடி சொத்தை காதலி ஒருவர் எழுதிக் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில், சிறுமி ஒருவர் தனது பெற்றோர் அடிக்கடி சண்டை இடுவதால் வீட்டில் மோசமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் அவரும் அவரது சகோதரியும் படிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சிறுமியின் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இருவருக்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் 16 மற்றும் 12 வயதில் இரண்டு சிறுமிகள் உள்ளன.
42 வயதான அந்த கணவர் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் 54 வயது விதவை பெண்ணை 8 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். திருமணம் ஆனதில் இருந்தே தனக்கு மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது.
முதலில் இந்த முடிவுக்கு மனைவி சம்மதிக்காததால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. ஏறக்குறைய மூன்று சுற்று ஆலோசனைக்குப் பிறகு காதலி, தன் காதலன் மனைவிக்கு சுமார் 60 லட்சம் மதிப்புள்ள வீடு, 27 லட்சம் ரொக்கப் பணத்தை கொடுப்பதாக சம்மதித்ததால் மனைவி தன் கணவனை விவாகரத்து செய்ய சம்மதித்தார். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பணம் தேவை என்பதாலும், நிம்மதியான வாழ்வை வேண்டியும் இந்த முடிவை அவர் எடுத்ததாக அப்பெண்ணின் வக்கீல் தெரிவித்துள்ளார்.