Categories
தேசிய செய்திகள்

“திருமணம் செய்து கொள்” தீ வைத்து கொன்ற காதலன்…. அதிர்ச்சி வாக்கு மூலம்…!!

கேரளாவில் காதலியை தீ வைத்து எரித்துக்கொன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட காதலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரளாவின் மாநிலம் திருச்சூர் அருகிலுள்ள சியாராம் பகுதியைச் சேர்ந்தவர் நீது (22). இவரது தாய் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்து விட்டார். இதையடுத்து தந்தை, நீதுவை தனியாக விட்டுவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இந்நிலையில் தனது பாட்டி மற்றும் மாமாவுடன் வசித்து வந்த நீது, கொடக்காராவில் உள்ள அக்சிஸ் பொறியியல் கல்லூரியில் பி.டெக் படித்து வந்தார்.இதையடுத்து நேற்று அதிகாலை, இவரது வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதனால்  அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்கு வெளியே ஒரு பைக் நின்றது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது குளியலறையில் தீ  காயத்துடன் விழுந்து கிடந்தார் நீது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தின உடனடியாக நீதுவை மீட்டு அருகில்  உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் வடக்கேகாடு பகுதியை சேர்ந்த நிதீஷ் என்பவரை கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. இது குறித்து  கூறும்போது, ’’நிதிஷ், எம்.பி.ஏ முடித்து, கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.இவர்  கடந்த 3 வருடங்களாக நீதுவைக் காதலித்து வந்தார். நிஷாவை  திருமணத்துக்கு வற்புறுத்தியுள்ளார் அப்போது படிப்பை முடித்து விட்டுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் நிஷா. இதனால் இவர்களுக்கு பிரச்னை இருந்து வந்ததையடுத்து நிஷா வேறு ஒரு நண்பருடன் பழகி வந்துள்ளார். இது தெரிந்ததும் கோபமுற்ற நிதிஷ் நேற்று அதிகாலை 5 மணிக்கு நிஷாவின் வீட்டுக்கு வந்தது திருமணம் பற்றி மீண்டும் பேச்சை தொடங்கினார். இதை நிஷா வழக்கம் போல மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நிதிஷ் காலை 7.30 மணியளவில் அவரை கத்தியால் குத்திவிட்டு தீ வைத்து எரித்தார். பின் தப்பி ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |