உங்களது சருமம் பளபளப்பாக இருக்க வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பராமரிக்கலாம்.
ஒரு டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து, பேஸ்ட் செய்து அதனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சம் சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் பொலிவடையும்.
வெள்ளரிக்காயை அரைத்து அதனுடன் பால் சேர்த்து முகத்தில் மாஸ்க் போல் போட்டு, வாரத்திற்கு மூன்று நாட்கள் இப்படி செய்து வந்தால் முகத்தில் எந்தவித தடையுமின்றி பிரகாசமாக இருக்கும்.
கசகசாவை இரவில் ஊற வைத்து மறுநாள் அதனை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி நன்றாக காய்ந்ததும், குளிர்ந்த நீரால் கழுவுங்கள். தினமும் அல்லது வாரத்திற்கு மூன்று நாட்கள் செய்து வந்தால் கழுத்து வாய் பகுதியில் இருக்கும் கருமை மறைந்து நிறம் பெறும்.
குங்குமப்பூவை சில நிமிடம் ஊற வைத்து அதனை நன்றாக குழைத்து, பால் கலந்து முகத்தில் தடவி வந்தால் முகம் அழகு பெறும்.
தக்காளியை மசித்து அதனுடன் தயிர் சேர்த்து, தேன் கலந்து முகத்தில் சேருங்கள் 15 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல நிறம் கிடைக்கும்.