ஜெர்மன் நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விமானநிலையத்தில், அதிக செலவில் கட்டப்பட்டு முடிக்கப்படாமல் உள்ள புதிய அரசு முனையத்தை நீக்குவதற்கு புதிய நிதியமைச்சர் தீர்மானித்திருக்கிறார்.
ஜெர்மனில் ஓலாஃப் ஷோல்ஸ், அதிபராக பதவியேற்றவுடன் புதிய அமைச்சரவையை ஏற்படுத்தினார். அந்த வகையில் புதிய நிதியமைச்சராக கிரிஸ்டியன் லிண்ட்னர் நியமிக்கப்பட்டார். இவர், வரும் வருடங்களில் நாட்டின் செலவினங்களுக்கான பொறுப்பை ஏற்கிறார்.
இந்நிலையில், புதிய நிதி அமைச்சரான இவர் முன்புள்ள செலவினங்களை ஆராய்வதற்காக சக பணியாளர்களை அழைத்தார். அப்போது பெர்லின் நகரில் இருக்கும் விமான நிலையம், ஒரு வருடத்திற்கு முன்பே திறக்கப்பட்டு விட்டது. எனினும் தற்போது வரை, அதில் அரசு முனையம் கட்டி முடிக்கப்படவில்லை.
எனவே, அந்த விமான நிலையத்தில் இருக்கும் புதிய அரசு முனையம் தேவையில்லை என்றும், அத்திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.