சீன நாட்டிற்காக, ஜெர்மனியின் தூதராக பதவியேற்ற அதிகாரி சில தினங்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சீன நாட்டிற்காக, ஐரோப்பிய நாட்டின் தூதராக கடந்த ஆகஸ்ட் மாத கடைசியில் தான் ஜான் ஹெக்கர் என்ற அதிகாரி பதவியேற்றார். இந்நிலையில், பதவியேற்ற சில தினங்களிலேயே அவர் திடீரென்று உயிரிழந்ததாக ஜெர்மன் வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, ஜெர்மனி வெளியுறவுத்துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “சீன நாட்டிற்கான, ஜெர்மன் தூதரின் திடீர் உயிரிழப்பு எங்களை வருத்தமடையச் செய்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், நெருக்கமானவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும், அவர் மரணமடைந்ததற்கான காரணம் வெளியிடப்படவில்லை.