Categories
தேசிய செய்திகள்

“ஜார்ஜண்ட் சட்டமன்ற தேர்தல்” 40,000 போலீஸ்….. பலத்த பாதுகாப்புடன் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு….!!

ஜார்கண்ட் மாநில சட்ட மன்ற தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

ஜார்கண்ட்  சட்டமன்ற தேர்தலுக்கான ஐந்தாவது இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர் மற்றும் பாஜக அமைச்சர்கள் இந்த தேர்தல் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 65 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 16 தொகுதிகளில் இன்று நடைபெறும் ஐந்தாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவின் பாதுகாப்பிற்கு  40 ஆயிரம் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆறு மாவட்டங்களில் இந்தத் தேர்தல் வெளிப்படையாகவும் அமைதியாகவும் நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மாநில காவல்துறை எடுத்துள்ளது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடையும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் 23ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |