Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுச் செயலாளர்…. பேராசிரியர்…. 1922 முதல் 2020 வரை….. முழு வரலாறு ….!!

இன்று அதிகாலை 1 மணிக்கு திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மறைவையொட்டி அவரின் முழு அரசியல் வரலாற்றின் தொகுப்பு.

திமுக பொதுச்செயலாளரும் , திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவரான காலமானார் பேராசிரியர் க.அன்பழகன் அதிகாலை 1 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 98 . வயது மூப்பு காரணமாக அன்பழகன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 24ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிர் பிரிந்தது.

1992-ல் பிறந்தார் : 

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் 1922ல் நாகை மாவட்டம் கொண்டத்தூரில் பிறந்தார். வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள கொண்டத்தூர் க.அன்பழகனின் சொந்த ஊர். கல்யாணசுந்தரம் – சுவர்ணாம்பாள் தம்பதியின் மகன் க.அன்பழகன்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்றார் : 

இளங்கலை முதுகலை படிப்பை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். பேராசிரியர் அன்பழகனுக்கு பெற்றோர் வைத்த பெயர் ராமையா என்பதாகும். திராவிட கொள்கையால் ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக ராமையா என்ற பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.

மனைவி வெற்றிச் செல்வி : 

திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மனைவி பெயர் வெற்றிச்செல்வி ஆகும். செந்தாமரை மணமல்லி என்ற இரு மகள்கள். மகன் அன்புச்செல்வனுடன் கீழ்ப்பாக்கம் இல்லத்தில் பேராசிரியர் அன்பழகன் வசித்து வந்தார்.

4 சகோதரர் , ஒரு சகோதரி : 

அன்பழகனுடன் பிறந்தவர்கள் பாலகிருஷ்ணன் ,அறிவழகன் ,மணிவண்ணன், திருமாறன் ஆகிய 4 சகோதரர்கள். தமிழரசி என்ற சகோதரியும் பேராசிரியர் அன்பழகன் பிறந்தவர் ஆவார். சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றிய அறிவழகன் சில ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். பேராசிரியர் பாலகிருஷ்ணன், பேராசிரியர் திருமாறன், தமிழரசி, மணிவண்ணன் நால்வரும் நலமுடன் உள்ளனர்.

9 முறை எம்எல்ஏ :

1957-ல் சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பிரானார் அன்பழகன்.

1962-ல் திமுக சார்பில் தமிழ்நாடு மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றினார்.

1967-ல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்வானார்.

1971, 1977, 1980 ஆகிய மூன்று முறை சென்னை புரசைவாக்கம் தொகுதி எம்எல்ஏவாக தேர்வானார்.

1984-ல் சென்னைப் பூங்காநகர் தொகுதியிலும் ,

1989-இல் சென்னை அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏவாக தேர்வானார்.

1996, 2001, 2006 தேர்தலில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

4 முறை அமைச்சர் :

1971, 1986, 1996, 2006 ஆகிய நான்கு ஆண்டுகளில் நான்கு முறை அமைச்சராகப் பணியாற்றியவர் க.அன்பழகன். சுகாதாரம், கல்வி, நிதி உள்ளிட்ட இலாகாக்களை சிறப்பாக நிர்வகித்த பெருமை அன்பழகனுக்கு உண்டு .

திமுகவின் ஆரம்ப கால தொண்டர் : 

1949இல் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் இறக்கும் வரை திமுக உறுப்பினராக இருந்தவர் பேராசிரியர் க.அன்பழகன் .

பொதுச்செயலாளர் அன்பழகன் :

திமுகப் பொருளாளராக பணியாற்றி வந்த அன்பழகன் 1977-இல் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001 முதல் 2006 வரை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக பணியாற்றியவர் அன்பழகன்.

பேராசிரியர் தம்பி : 

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றியவர் அன்பழகன். பேராசிரியராக பணியாற்றிய போது ”பேராசிரியர் தம்பி” என்றுதான் அண்ணா அழைப்பார்.

இனமானப் பேராசிரியர் :

தமிழர் இனம் சுயமரியாதைக் கொள்கை குறித்து அதிகம் பேசியதால் இனமான பேராசிரியர் என்பது  அன்பழகனின் அடைமொழி.

கலைஞரின் இளமைக்கால நண்பர் :

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது அன்பழகனை அழைத்து திருவாரூரில் கூட்டம் நடத்தியவர் கலைஞர். திருவாரூர் கூட்டத்தில் கலந்துகொண்ட நாள்முதல் கலைஞரின் நண்பரானார் அன்பழகன்.

கலைஞர் – பேராசிரியர் நட்பு :

கலைஞருக்கும் பேராசிரியருக்கும் இடையே நட்பு 1942 இல் தொடங்கியது. திருவாரூரில் 1942இல் நடந்த சிக்கந்தர் விழாவில் அண்ணாவுடன் வந்த அன்பழகனை சந்தித்துப் பேசினார் கலைஞர். 1942 இல் தொடங்கிய அன்பழகன் நட்பு 2018இல் கலைஞர் காலமானது வரை நீடித்தது.

பெரியாரின் வழித் தோன்றல் :

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த நாள் முதலே பெரியாரின் தொண்டராகவே இருந்து வந்தார் க.அன்பழகன்.

நூல் ஆசிரியர் அன்பழகன் :

இனமொழி வாழ்வுரிமை போர் வாழ்க திராவிடம் தமிழர் திருமணமும் இனமானமும் உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர் உள்ளிட்ட 40 நூல்களின் ஆசிரியர் க.அன்பழகன்.

அதிக காலம் மக்கள் சேவை :

தமிழக அரசியல் தலைவர்களின் மிக அதிக காலம் மக்கள் சேவை ஆட்சியர் க.அன்பழகன்.

க.அன்பழகன் இறந்ததையடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் இன்று முதல் 7 நாட்களுக்கு ஒத்தி வைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Categories

Tech |