பிரித்தானியாவில் அறிவியல் ஆலோசகர் ஒருவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது அந்நாட்டில் பொதுமுடக்கம் மீண்டும் அறிவிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அரசின் அறிவியல் ஆலோசனை குழுவின் உப குழுவான CO-CIN-ன் உறுப்பினரான பேராசிரியர் Peter Openshaw கூறியுள்ளார். மேலும் இதனால் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பொது முடக்கம் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது பிரித்தானியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று முன்தினம் கொரோனா தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. இருப்பினும் அறிவியல் ஆலோசனை குழுவான SAGE அறிவியலாளர்கள் பிரித்தானிய மருத்துவ அமைப்பு கட்டுப்பாடுகள் விதிக்காவிட்டாலும் குளிர்காலத்தில் பெரிதாக பாதிக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் Openshaw கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் உடனடியாக விதிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் பொதுமுடக்கம் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் அறிவிக்கப்படும் நிலை உருவாகலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதில் தாமதம் ஏற்பட்டால் பின்பு மோசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் Openshaw கூறியுள்ளார்.