முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது முப்படைகளுக்கும் ஒரு தலைமை தளபதி நியமிக்கப்படுவார் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து அண்மையில் முப்படைகளுக்கும் தலைமை தளபதியை நியமிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்தநிலையில் ராணுவம், விமானப்படை கடற்படை ஆகிய முப்படை தளபதிகளின் ஆலோசகராக ஜெனரல் பிபின் ராவத் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ராணுவ தளபதியாக உள்ள பிபின் ராவத் பதவி நாளை முடியும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.