மிதுனம் ராசி அன்பர்களே…!! இன்று ஆலய வழிபாட்டால் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். வசதிகள் பிறக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தபால் வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முன்கோபத்தை குறைப்பது நன்மை கொடுக்கும். கூடுதலாகவே இன்று உழைக்க வேண்டியது இருக்கும். உங்களது வேலையை மற்றவர்கள் கண்டு பொறாமைப்படுவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும்.
செல்வ நிலை உயரும். வாழ்க்கை துணையை ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். பெண்களுக்கு வீண் பேச்சுக்களை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை கொடுக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பு கொடுக்கும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாகவே நடக்கும். அதுபோலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். நீங்கள் வெற்றி பெறக் கூடிய சூழல் இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்