Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “கொடுக்கல் வாங்கலில் கவனம்”….. உத்யோகத்தில் நல்ல பெயர்……!!!

மிதுன ராசி அன்பர்களே….!! இன்று வர வேண்டிய பணம் கைக்கு கிடைத்து, மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். போட்டிகளை சமாளிக்க வேண்டியிருக்கும். தொழில் வியாபாரத்தில் உங்களுக்கு இடையூறுகள் வந்து சேரும் பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். வெளியூர் பயணம் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். அதேபோல வாடிக்கையாளரிடம் பேசும்பொழுதும் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள்.உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர், மேலிடத்திலிருந்து அதிகமான சுமைகளை கொஞ்சம் ஏற்க வேண்டியிருக்கும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.

சரியான நேரத்திற்குள் உணவை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று ஆதாயம் கிடைப்பதற்காக அலைய வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்கள் பேசும் பொழுது எந்தவித வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் பேசுவது நல்லது. கூடுமானவரை இன்று பொறுமையை கையாண்டால் அனைத்துக் காரியமும் மிதுனராசிக்காரர்களுக்கு நல்லபடியாக முடியும். இன்று கணவன் மனைவிக்கிடையே ஓரளவு அன்பு இருக்கும். அதே போல மனைவியிடம் கொஞ்சம் ரொம்ப அன்பாக நடந்து கொள்ளுங்கள். அக்கம்பக்கத்தினர் இடம் பேசும் பொழுது கூட நிதானமாகப் பேசுங்கள்.

யாரிடமும் இன்று நீங்கள் முக்கியமாக வாக்குவாதங்களை செய்யாமலிருப்பது நல்லது. இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |