Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “மறைமுக விமர்சனம் வரும்”.. நீங்களே முடிவெடுக்கப்பாருங்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று திட்டமிட்டவை தாமதமாகத்தான் நடந்தேறும். மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசிக் கொண்டு செல்ல வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்து போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாளாக இன்று இருக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.

புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். இன்று ஓரளவு மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மாணவக் கண்மணிகள் மட்டும் கொஞ்சம் முயற்சியின் பேரில் பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள்.

அப்போது தான் நினைவில் வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்

Categories

Tech |