மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று அனைத்து பாக்கியங்களும் பெருகும் நாளாக இருக்கும். இன்று உங்கள் வீட்டில் நல்ல சிறப்பான சம்பவங்கள் நடக்கும். உங்கள் காட்டில் இன்று மழை தான். தெய்வ நம்பிக்கையும் வாழ்வில் நல்ல திருப்பங்களும் ஏற்படும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். இன்று உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம் பார்த்துக்கொள்ளுங்கள். மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய நண்பர்களால் தேவையில்லாத சின்ன சின்ன பிரச்சனைகள் மட்டும் உண்டாகும். அதை மட்டும் கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொண்டால் போதும். எதிலும் எதிர்பாராத தடைகள் கொஞ்சம் இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உயரும்.
உங்களுக்கு செல்வாக்கும் இன்று பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும். உங்களை தேடி இன்று முக்கிய நபர்கள் வரக்கூடும். அதன் மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடைய கூடும். மாணவர்கள் மட்டும் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறுதற்கு கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது நீலநிற ஆடை அல்லது நீல நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லை இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாடு உங்களுக்கு சிறந்த வழிபாடாக இருக்கும். சித்தர்களை மனதார நினைத்து வழிபடுங்கள். உங்களுடைய தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ பாக்கியம் உண்டாகும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்