பூண்டு சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களின் தொகுப்பு.
வெள்ளை வெங்காயம் என்னும் அடைமொழி பெயரைக் கொண்டது பூண்டு. பூண்டு இரண்டு வகையாக கிடைக்கின்றது. ஒன்று நாட்டுப்பூண்டு, மற்றொன்று மலைப்பூண்டு. நாட்டுப் பூண்டிற்கும், மலைப் பூண்டிற்கும் என்ன வித்தியாசம் என்றால், மலைப்பூண்டு பெரியதாகவும், நாட்டுப்பூண்டு சிறியதாகவும் காணப்படும்.
நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களில் ஒன்று பூண்டு. இதில் ஆன்ட்டிபயாட்டிக் சக்திகள் அதிகமாகவே இருக்கும். அதனால் உடலில் உள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்களை விரட்டியடிக்கும் சக்தி இதற்கு உள்ளது. எல்லா நாடுகளிலும் எளிதாக கிடைக்கக் கூடிய பொருளாக பூண்டு விளங்குகிறது. இதை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. சமைத்து சாப்பிடுவதால் அதில் உள்ள அலிசின் சத்து குறைந்துவிடுகிறது.
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
- நெஞ்சு வலியில் இருந்து விடுபட, பூண்டு சாறு மற்றும் இஞ்சி சாறு கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.
- வாத நோய் நீங்க பூண்டை, பச்சையாக சாப்பிடவேண்டும்.
- இரவில், பாலில் இரண்டு பூண்டு சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்.
- பூண்டு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.
- பூண்டு சாப்பிடுவதால் ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகள் சீராகும்.
- பூண்டு சாப்பிட்டால் வாயுத்தொல்லையும் சரியாகும்.