Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சந்தேகப்படும் வகையில் நின்ற கார்…. கண்காணித்த காவல்துறை…. வசமாக சிக்கிய வாலிபர்….!!

சட்டவிரோதமாக காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முனியசாமிபுரம் பகுதியில் தென்பாகம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு காரை பார்த்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் தூத்துக்குடி முனியசாமிபுரம் பகுதியில் வசிக்கும் டேனியல் ராஜ் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காரில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக டேனியல் ராஜை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 600 கிராம் கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |