Categories
விளையாட்டு

என் ஹீரோ…. உங்களுக்காக தான் பார்த்தேன்…. வருத்தம் தெரிவித்த கங்குலி…!!

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது ஹீரோ மறைந்து விட்டதாக கூறி கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்

கால்பந்தாட்ட விளையாட்டு ஜாம்பவானாக திகழ்ந்தவர் டீகோ மரடோனா. அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான இவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக தகவல் வெளியானது. தனது வீட்டில் இருந்தபோது 60 வயதான மரடோனா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரும் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி தனது உருக்கமான இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது ஹீரோ மறைந்துவிட்டார். கால்பந்து போட்டிகளை உங்களுக்காகவே பார்த்தேன். நான் யாருக்கு தீவிர ரசிகையாக இருந்தேனோ அவர் அமைதி அடைந்து விட்டார்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Categories

Tech |