கேங்ஸ்டராக சாண்டி நடித்துள்ள கன்னட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமான சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் . இதையடுத்து தற்போது படங்களில் கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார் . அறிமுக இயக்குனர் சந்துரு இயக்கும் ஹாரர் த்ரில்லர் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் கன்னடத்தில் கேங்ஸ்டர் படம் ஒன்றில் நடித்து வருகிறார் . தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி என பல மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்திற்கு ஹெட் புஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் அண்டர்வேர்ல்ட் டானாக சாண்டி நடித்துள்ளார் .
இந்த படம் 1980களில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. பெங்களூருவை கலக்கிய அண்டர்வேர்ல்ட் டானின் வாழ்க்கை வரலாறு படத்தில் சாண்டி சாம்சன் கதாபாத்திரத்திலும் தனஞ்சய் கதாநாயகனாகவும் நடிக்கிறார் . இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் அம்பாசிடர் கார் முன்னால் செம ஸ்டைலாக சாண்டி போஸ் கொடுப்பது போல் அமைந்துள்ளது.