அமெரிக்காவில் காந்தி சிலை சேதபடுத்தப்பட்டதற்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் டேவிஸ் நகரின் மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கல சிலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் சேதப்படுத்தியுள்ளனர். காந்தி சிலையின் முகம் மற்றும் கணுக்கால் பகுதிகளில் உடைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்த சிலை உடைப்பு குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சகி கூறிய போது “காந்தியின் சிலையை இழிவுபடுத்தியது குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம். இந்த செயலை கண்டிக்கிறோம். இந்த செயல் தொடர்பான விசாரணையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். இந்நிலையில் மத்திய பூங்காவில் இருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கண்டன கூட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சிலை சேதப்படுதப்பட்டதர்க்கு அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.