கன்னட சினிமாவில் நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த திரைப்படம் ”காந்தாரா”. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி முதலில் கன்னட மொழியில் ரிலீசானது. இந்த திரைப்படம் கர்நாடகாவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனயடுத்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த திரைப்படம் அனைத்து மொழிகளிலும் நல்ல வசூல் சாதனை படைத்தது. இதுவரை உலக முழுவதும் இந்த திரைப்படம் 400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டினர் .
அந்த வகையில், தற்போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் இந்த படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ”’இந்த படத்தை பார்த்து நான் நிறைய கற்றுக் கொண்டேன். படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு வியப்பை அளித்தது. மேலும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.