Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா”….. முதலில் புனித் ராஜ்குமார் தான் நடிக்க இருந்தார்….. நடிகர் ரிஷப் செட்டி ஓபன் டாக்…..!!!!!

கன்னட சினிமாவில் வெளியாகிய சூப்பர் ஹிட் ஆன காந்தாரா திரைப்படம் தற்போது தென்னிந்திய மொழிகளில் ரிலீசாக 305 கோடி வரை சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் நாயகன் மற்றும் இயக்குனரான ரிஷப் செட்டி தற்போது ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது கடந்த வருடம் கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக திடீரென உயிரிழந்தார். இவர் இறந்து தற்போது ஒரு வருடமாகும் நிலையில், கர்நாடக அரசு புனித் ராஜ்குமாருக்கு உயரிய கர்நாடகா ரத்னா விருதை வழங்கி கௌரவித்துள்ளது.

இதனால் புனித் ராஜ்குமார் பற்றி பல்வேறு பிரபலங்கள் சில விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரிஷப் செட்டியும் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, நான் காந்தாரா படத்தின் கதையை தயார் செய்த பிறகு முதன்முதலாக கதையை புனித் ராஜ்குமாரிடம் தான் கூறினேன். நான் கதை சொன்ன உடனே அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. உடனே படத்தில் நடிப்பதற்கு ஓகே கூட சொன்னார். ஆனால் அவர் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் பிரச்சனையின் காரணமாக காந்தாரா திரைப்படத்தில் நடிக்க முடியவில்லை.

இதனால் புனித் ராஜ்குமார் என்னை அழைத்து எனக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம் நீயே இந்த படத்தில் நடி என்று கூறினார். அவர் கூறிய பிறகுதான் நானே படத்தில் நடிக்க ஆரம்பித்தேன். அவர் இறப்பதற்கு  இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூட என்னை பார்த்து படத்தில் வேலைகள் எந்த அளவுக்கு நடந்து கொண்டிருக்கிறது என்று கேட்டார். அவர் இந்த படத்தில் நடித்திருந்தால் இன்னும் கூடுதல் சிறப்பம்சம் கிடைத்திருக்கும் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Categories

Tech |