Categories
அரசியல்

கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள்…. வெளியான பட்டியல் இதோ….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் கூகுளை பயன்படுத்தி தனக்கு தேவையானவற்றை தேடி பெறுகின்றனர். அவ்வாறு அதிகம் தேடப்படும் பட்டியலை வருடம் தோறும் Year in search என்ற பெயரில் google நிறுவனம் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான Year in search பட்டியலை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகள் பற்றிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டுகளில் IPL முதலிடத்தில் உள்ளது. IPLன் தொடக்க நிகழ்ச்சியை 22.9 மில்லியன் பார்வையாளர்கள் தொலைக்காட்சியில் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து கட்டார் நாட்டில் வெகு சிறப்பாக நடந்து முடிந்த கால்பந்தாட்ட தொடர் தான் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்கள் ஆண்கள் பிரிவில் இலங்கை நாடும் பெண்கள் பிரிவில் இந்திய நாடும் சாம்பியன் பட்டமும் வென்றது. இந்த போட்டி தான் கூகுளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.

8ஆவது ICC  T20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நவம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெற்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை  இங்கிலாந்து வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

இந்த போட்டி இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஜூலை 28 லிருந்து ஆகஸ்ட் 8 வரை நடைபெற்றது. இதில் 178 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தை பிடித்தது. அதோடு இந்தியாவுக்கு 61 பதக்கங்கள் கிடைத்தன.

அதன்பின் இந்தியன் சூப்பர் லீக் இந்தியாவில் கால்பந்தாட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்ற தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடர்களில் 6 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

இந்த போட்டி 2014ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 8 ஆவது சீசன் அக்டோபரில் தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடந்தது. மேலும் இது நியூசிலாந்தில் மார்ச் மற்றும் ஏப்ரலில் நடந்தது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது.

ஒற்றையர் ஆண்கள் பிரிவில் ரபேல் நடாலும் பெண்கள் பிரிவில் ஆஷ்லெக் பார்ட்டியும் சாம்பியன் பட்டம் வென்றனர்.குறிப்பாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு தொடரில் 10ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Categories

Tech |