இளைஞர்கள் சிலர் காவிரி ஆற்றில் முதலையின் வாலை பிடித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காவிரி ஆற்றில் முதலையுடன் வாலிபர்கள் விளையாடும் வைரல் வீடியோ ஒன்று பொதுமக்களின் செல்போன்களில் வைரலாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணையிலிருந்து வரும் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சில இளைஞர்கள் வந்துள்ளனர். அப்போது 5 அடி நீளமுள்ள முதலையின் வாலை பிடித்துக்கொண்டு ஆற்றில் விளையாடும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் இளைஞர்களால் பிடிக்கப்பட்ட முதலை இறந்து விட்டதா? அல்லது உயிருடன் இருக்கிறதா? என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து காவிரி ஆற்றில் தற்போது குறைந்த அளவே நீர் செல்வதால் கரையோரத்தில் உள்ள மக்கள் குளிப்பதற்காக செல்கின்றனர். மேலும் அம்மா மண்டபம், கம்பரசம்பேட்டை தடுப்பணை பகுதியில் குளிப்பது, முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும் வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் ஆற்றில் முதலை தவிடியோவால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி உள்ளது.