ஒரு வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து விட்டனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு போலீசாருக்கு மூகாம்பிகை நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சில சட்ட விரோதமாக சூதாடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்து விட்டனர்.
இதனையடுத்து பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக அந்த வீட்டின் உரிமையாளரான நரேஷ் என்பவரையும், சூதாட்டத்தில் ஈடுபட்ட ஜெகன், கார்த்திக், முத்துக்குமார், பிரேம்குமார், சிவமூர்த்தி, முனியன் போன்ற பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அதோடு அவர்களிடமிருந்த 2,000 ரூபாயையும், சீட்டுக் கட்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.