Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படம்…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு…. வைரலாகும் புகைப்படம்….!!!

ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் மற்றும் இவர் இசையில் வெளியாகும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படத்தின் முதல் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தார்.

gv_new_flm_pooja

இதனயடுத்து, இவர் நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் இயக்குனர் உதய் மகேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மலையாள நடிகை அன்ஸவரா ராஜன் நடிக்கவுள்ளார். ஜி,வி பிரகாஷின் சகோதரியாக தேவதர்ஷினி நடிக்கிறார்.

மேலும், இந்த படத்தில் ஹஸிம் அப்துல், டேனியல் அண்ணே போப், மதுசூதன் ராவ் போன்றோர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் அடுத்தாண்டு திரையரங்கில் ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Categories

Tech |