திருமணம் செய்த மனைவியை தம்பியுடன் உல்லாசமாக இருக்க சொல்லி சித்திரவதை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வரும் 34 வயதுடைய பெண்ணொருவருக்கு 2008ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவர் நைஜீரியாவின் லாகோஸ்ல் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதையடுத்து சிறிது நாட்களில் அந்தப் பெண்ணும் லாகோஸ்க்கு சென்று தன் கணவனுடன் தங்கிய வந்திருந்தார். பின்னர் 2016 இல் தனது குழந்தையுடன் அவர் இந்தியாவுக்கு திரும்பவே அவரது மாமியார் அடுத்த சில மாதங்களில் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து கணவனும் இந்தியாவிற்கு திரும்பி வேலை ஏதும் செய்யாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் .
ஆனால் அவரது சகோதரர் அவருக்கு பண உதவி செய்து வந்துள்ளார். மேலும் தம்பி தன் மனைவி மீது ஆசைப் பட்டதை அறிந்த அப்பெண்ணின் கணவர் தனது தம்பியுடன் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று அந்த பெண்ணை சித்திரவதை செய்துள்ளார். இதைத் தாங்க முடியாத அப்பெண் காவல் நிலையம் சென்று கணவன் மீதும், கணவன் தம்பி மீதும் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.