Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

யார் இன்று காதலில் வயப்படக்கூடும்… முழு ராசி பலன் அறிய..!!

மேஷ ராசி அன்பர்களே…!!! இன்று விரயங்கள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வீடு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காகும். தொலைதூர பயணங்களால் பலன் கிடைக்கும். மருத்துவ செலவுகள் இன்று இருக்கும், ஆகையால் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்று யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் பேசுவது நல்லது. எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படுங்கள்.

கடின முயற்சியின் பேரிலேயே காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். கலை துறையை சேர்ந்தவர்களுக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகளும் கிடைக்கும். தேவையான பண உதவி இன்று கிடைக்கும். கடன் தொல்லைகள் குறையும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கூடுமானவரை இன்று வாக்குவாதங்கள் மட்டும் வேண்டாம்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு எதிர்காலம் குறித்த சிந்தனை இன்று மேலோங்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர் இயன்ற அளவில் உதவிகளை புரிவார்கள். தொழிலில் உருவாகிற இடையூறுகளை உடனடியாக சரி செய்வது சிறப்பு. குறைந்த அளவில் பணவரவு கிடைக்கும். அதிகம் பயன்தராத பொருள்களை விலைக்கு வாங்க வேண்டாம். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச்சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மையை கொடுக்கும்.

இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நட்பு மத்தியில் பெரிதாக மதிக்கப்படுவீர்கள். இன்று பெரியாரின் ஆலோசனை உங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும். அதேபோல திருமணமாகாதவர்களுக்கு திருமண முயற்சி கைகூடும். உடலில் வசீகரத் தன்மை கூடும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் எந்தவித பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கல்வியில் ஆர்வம் மிகுந்து இருக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்கள் இயன்ற அளவில் உங்களுக்கு உதவிகளை புரிவார்கள். நண்பர்கள் சிலர் தேவையற்ற ஆலோசனை சொல்லக்கூடும். தொழில் வியாபார நடைமுறை சராசரி அளவில் இயங்கும். புதிய இனங்களில் பணச்செலவு ஏற்படலாம். மனம் தியானம் தெய்வ வழிபாடு போன்றவற்றை தேடி அலைய கூடும். இன்று எதிலும் நிதானம் இருக்கட்டும். மாணவர்கள் சக மாணவரின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. அனைவரையும் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது.

இன்று சுமுகமான சூழ்நிலையை சந்திக்க வேண்டுமென்றால் கொஞ்சம் நீங்கள் அமைதியாக காணப்படவேண்டும். அதே போல எந்த ஒரு காரியத்தையும் நிதானமாக செய்து முடிப்பீர்கள். இன்று புதிய முயற்சிகளை நீங்கள் செய்யும் பொழுது பெரியாரிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். கூடுமானவரை அனுபவிக்கவரின் ஆலோசனை உங்களை நல்வழிப்படுத்தும். குடும்பத்தை பொறுத்த வரை எந்த விதப் பிரச்சினையும் இல்லை. நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும்.

இன்று மனைவி மூலம் நீங்கள் ஒரு சில முக்கிய பணியை செய்து முடிப்பீர்கள். அதனால் உங்களுடைய மனம் மகிழ்வாக காணப்படும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களை திட்டமிட்டு துவங்குவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.. தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக மேற்கொள்வீர்கள். நிலுவைப்பணம் வசூலாகும். இஷ்ட தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராடுவீர்கள். இன்று திட்டமிட்டு செய்யும் காரியங்கள் சிறப்பாக இருக்கும். யாரிடமும் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம். இந்த விஷயத்தில் நீங்கள் கவனமாக இருங்கள்.

ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதாவது செய்யும் வேலைகளில் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். பயணிகள் செல்ல வேண்டி இருக்கும். பயணங்களால் உங்களுக்கு அலைச்சல் இருக்கும். இருந்தாலும் புதிய அனுபவத்தை இன்று நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இன்றைய நாள் ஓரளவு செல்வமிக்க நாளாகவும் இருக்கும். அதாவது அதிர்ஷ்டமான வாய்ப்புகள் வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும். இதன் மூலம் காதலில் வயப்பட கூடும் பார்த்துக்கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை. கல்வியில் ஆர்வம் சிறப்பாக இருக்கும். சக மாணவனிடமும் அன்பு இருக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் எப்பொழுதுமே உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வுகள் மாறுபட்டதாக அமையலாம். தொழிலில் திட்டமிட்ட இலக்கை அடைய புதிய நுட்பங்களை பயன்படுத்துவது அவசியம். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். இருந்தாலும் மருத்துவ சிகிச்சை கொஞ்சம் தேவைப்படும். அதாவது திடீரென்று வயிறு உப்புசம் போன்றவை இருக்கும். சரியான உணவை எடுத்துக் கொண்டால் எந்தவித பிரச்சினையும் இன்றைக்கு இருக்காது. இன்று குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கை துணையால் நன்மை உண்டாகும்.

குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உறவினர் நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம் இருக்கும். அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். நிதானமாக செயல்படுங்கள். நண்பரிடம் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக நீங்கள் செல்ல வேண்டும். தொலைபேசியில் பேசிக் கொண்டெல்லாம் செல்ல வேண்டாம். யாருக்கும் நீங்கள் தயவுசெய்து வாக்குறுதிகளை இன்று கொடுக்காதீர்கள். அதேபோல பணம் கடனாக வாங்காதீர்கள். நீங்களும் கடன் கொடுக்காதீர்கள்.

இந்த விஷயத்தில் ரொம்ப கடைபிடிக்க வேண்டும். அதாவது கவனத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிரியினால் உருவாக்கப்பட்ட சிரமம் செயலிழந்து போகும். எதிர்ப்புகள் உங்களிடம் இருந்து விலகிச்செல்லும். புதிதாக வருகிற பணியை திறம்பட செய்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். இன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.

எனவே கவனமாக இருப்பது நல்லது. இன்று ஓரளவு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் வந்து சேரும். வெளியிடங்களுக்கு சென்று பொழுதை கழிப்பதற்கான சூழலும் இருக்கும். இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் வயப்படகூடும். திருமண முயற்சி மேற்கொள்ளுங்கள். அனைத்துமே சிறப்பாக நடக்கும். அதே போல் பங்கு சந்தையில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.

இன்று வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். அங்கிருந்து வரக்கூடிய  தகவல் உங்களுக்கு நல்ல தகவலாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்

Categories

Tech |