கடலூர், திருவாரூர், அரியலூரை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்திலும் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருந்தகங்கள், பால் கடைகள் மற்றும் அம்மா உணவகங்கள் மட்டுமே இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,526 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மேலும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் மொத்தம் 1,082 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அரியலூரில் புதியதாக 19 பேருக்கு கொரோனோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அம்மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்திலிருந்து சிவப்பு மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது.
அரியலூரில் தற்போது மொத்த பாதிப்பு 27 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. கடலூரில் இதுவரை 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தஞ்சையில் நாளை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.