பஞ்சாப் மாநிலம் மெகாலியில் சோஹானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வீர்பால் கவுர் மற்றும் சிப்பி ஷர்மா ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் உடற்கல்வி ஆசிரியர்கள். இந்த 2 ஆசிரியர்களும் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று கையில் பெட்ரோல் பாட்டிலுடன் தற்கொலை செய்து விடுவோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போது 646 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து போராட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் கூறும்போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேலை வாய்ப்பு தருவதாக கூறினர். அதேபோன்று ஆம் ஆத்மி கட்சியினரும் வேலை வாய்ப்பு வாங்கித் தருவதாக உறுதி அளித்தனர். அவர்கள் ஆட்சியில் அமர்ந்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை வேலை வாய்ப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பு வழங்காவிடில் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Physical training instructor teacher Sippy Sharma says, "We were guaranteed jobs by previous Punjab govt, but never got one. At that time, AAP assured us of jobs, but even after 7months of AAP govt,still false assurance being given to us."
(Source:Selfmade video by Sippy Sharma) pic.twitter.com/oM7aTJLdII
— ANI (@ANI) October 5, 2022