திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர்.
சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை கொடுமை செய்தும் வயிற்றில் இருக்கும் கருவைக் கலைத்தும் கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேரி தாம்பரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், இதுதொடர்பாக செயிண்ட் தாமஸ் மவுண்ட் பகுதி துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மேரியின் மாமனார் வர்கீஸ், அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி காவல் ஆய்வாளரை வைத்து மேரியை வீட்டை விட்டு வெளியேற்ற சதி செய்துள்ளனர்.