டிராகன் பலத்துக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அரசு முடிவு செய்திருப்பதாக அம்மாநில முதல்வர் விஜய் ரூபிணி கூறியுள்ளார்.
இந்த பழத்துக்கு டிராகன் என்ற பெயர் பொருத்தமாக இல்லை. ஏனெனில் டிராகன் என்ற வார்த்தை சீனாவை நினைவுபடுத்தும். இந்த பழம் தாமரைப்பூ வடிவில் இருப்பதாக இங்குள்ள விவசாயிகள் கூறுகின்றனர். இந்த பழத்தின் பெயரை கமலம் என்று மாற்றுவதற்கு மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் எந்த அரசியல் மாற்றமும் இல்லை. மாநிலத்தில் பல பகுதிகளில் அதிக அளவில் விளையும் இந்த பழத்தில் சத்துக்கள் அதிகம், இந்த பழம் கட்ச், நவஸாரி மற்றும் சௌராஷ்டிர பிராந்தியத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
இந்த பலத்துக்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்து உள்ளோம் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த பழத்தை கமலம் என்ற பெயர் மாற்றம் செய்யவும் அரசு முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் இது பாஜகவின் சின்னமாகும். குஜராத்தில் பாஜகவின் அலுவலகத்தின் பெயரும் ஸ்ரீ கமலம் என்று உள்ளது. எனவே முதல்வரின் பெயர் மாற்றும் முயற்சியை அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.