நீலகிரியில் உறைபனியினால் தேயிலை பயிர்கள் கருகிய சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்தது. குறிப்பாக வடகிழக்கு பருவமழை நீலகிரி மாவட்டத்திலேயே குன்னூர் பகுதியில் தான் அதிக பொழிவை தந்தது என்று கூறலாம். அதன்படி மழைப்பொழிவை நம்பி விவசாயிகள் பச்சைத் தேயிலையை பயிரிட்டனர். அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரை மழை பொழிந்த நிலையில்,
இந்த வருடம் ஜனவரி மாதம் முதலிலே உரை பனி தொடர்ந்து நிலவி வருகிறது. இதன்படி பகலில் வெயிலிலும், மாலை 4 மணிக்கு மேல் கடும் குளிரும் நிலவத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வீட்டுக்குள்ளேயே மாலை 5 மணிக்கு மேல் முடங்க தொடங்கினர். இவ்வாறு இருக்கையில், உரை பனியினால் பயிரிடப்பட்ட பச்சைத் தேயிலை உரை பனியில் தேயிலை கருகி நாசமாகிப் போனது. இதனால் தேயிலையின் வரத்து குறைந்ததாலும், அதன் விலை குறைக்கப்பட்டதாலும் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.