கொரோனா நோய் பரவல் காரணமாக முன்கள பணியாளர்களுக்கு மேலும் 6 மாதங்களுக்கு காப்பீட்டு திட்டம் வழங்கப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நோய் பரவல் ஒரு வருடத்திற்கும் மேலாக பரவி கொண்டு மக்களை பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. சில மாதங்களாக இதனின் தாகம் குறைந்த நிலையில் மீண்டும் 2-வது அலையாக மின்னல் வேகத்தில் பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு பலத்த கட்டுப்பாடுகளும், ஊரடங்குகளும் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் லட்சக்கணக்கான நோயாளிகளை மீட்டெடுப்பதில் மருத்துவ உலகம் முக்கிய பங்கு வகுத்துள்ளது. இதனால் கொரோனாவிற்கு எதிராக போராடி வரும் சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் போராடி வருகின்றனர். கொரோனாவுடன் தினம் தினம் போராடி வரும் இவர்களுக்கு அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவும் நிலை ஏற்பட்டு வருகின்றது. பலர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று மீண்டு வந்துள்ளனர்.இது போன்று கொரோனாவிடம் போராடி வரும் இந்த பணியாளர்களுக்கும், இவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு சென்ற ஆண்டு மார்ச் மாதம் இந்த சுகாதார பணியாளர்களுக்கு காப்பீட்டு திட்டத்தை அறிவித்து வழங்கியது.
இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் குறித்து, பல்வேறு அதிகாரம் பெற்ற குழுக்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி அவர்கள் காணொளி மூலம் ஆய்வினை நடத்தியுள்ளார்.கொரோனா மற்றும் நிவாரண பணிகள் மக்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பாக பல்வேறு அம்சங்களையும் இந்த குழுவினர் ஆராய்ந்து மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்பு முன்கள சுகாதார பணியாளர்களுக்கு இதற்கு முன்பாகவே அளிக்கப்பட்ட காப்பீட்டு திட்டங்கள் போலவே இன்னும் 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.