நிவர் புயலால் கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி சென்னையில் பிரதான சாலைகள் மூடப்பட்டுள்ளன. எண்ணூர் விரைவு சாலை, மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை சாலை, ஈசிஆர், பழைய மாமல்லபுரம் சாலை, பூந்தவல்லி நெடுஞ்சாலை, அண்ணாசாலை ஆகியவை மறு உத்தரவு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி செல்லும் மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் புதுச்சேரிக்கு வடக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. அதன் முன்பகுதி கடந்த ஒரு மணி நேரமாக கரையை கடந்து கொண்டிருக்கிறது. இன்னும் மூன்று மணி நேரத்தில் மையப்பகுதி கடையை கரையைக் கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில் இப்படியான ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.