Categories
மாநில செய்திகள்

இன்று முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை – அறிவிப்பு

கொரோனா வைரஸ் எனும் கொடிய பெருந்தொற்று நோய் பரவியதை அடுத்து நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கல்வி நிலையங்கள் திறப்பு எப்போது ? என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படாத நிலையில், மாணவர்களின் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுக்கள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் வரும் நவம்பர் 2ம் தேதி வரை இணையம் மூலம் பதிவு செய்து, கல்லூரிகளை தேர்வு செய்யலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு விவரங்கள் நவம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |